பழநியில் பலத்த காற்று ரோப் கார் நிறுத்தம்
ADDED :2823 days ago
பழநி: பழநி மலைக் கோவில் பகுதியில் பலத்த காற்று வீசி, ரோப்கார் சேவை அடிக்கடி நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.பழநி முருகன் மலைக் கோவிலுக்கு, மூன்று நிமிடங்களில் எளிதாக மேலே செல்லவும், அதே நிமிடத்தில் கீழே வரும் வகையில், ‛ரோப்கார் இயக்கப்படுகிறது. (பிப்.25) ஞாயிறு விடுமுறை தினத்தில், ரோப்கார் மூலம் மலைக்கு செல்ல பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.வழக்கத்திற்கு மாறாக, 40 கி.மீ., வேகத்திற்கு அதிகமாக காற்று வீசியதால், ‛ரோப்கார் சேவை பகல் 12:00 மணி முதல், 1:30 மணி வரையும், அதன்பின் பலத்த காற்று வீசிய நேரங்களில் நிறுத்தப் பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். ரோப்கார் சேவை பாதிப்பால் வின்ச்-ல் மூலம், படிப்பாதை, யானைப் பாதை மூலம் பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.