உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வெளியூர் பக்தர்கள் கூட்டம் வருகை (பிப்.25), அதிகமாக இருந்தது. இதனால், இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வார விடுமுறை நாட்களில் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருவர். கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், (பிப்.25), வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இதனால், வாகனங்கள் நிறுத்த இடமின்றி, போக்குவரத்து நெரிசலில் மாட வீதி சிக்கி தவித்தது. பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !