உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவள்ளி பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

வடவள்ளி பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

வடவள்ளி : பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர், பிரத்தியங்கிரா தேவி கோவில் கும்பாபிஷேகம் (பிப். 25) நடந்தது.

வடவள்ளி, நவாவூர் பிரிவில் அமைந்துள்ளது பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவில். இக் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு யாகசாலை ஹோமத்துடன் துவங்கியது. 23ம் தேதி காலை 6:00 மணிக்கு முதற்கால பூஜையும், பகல் 12:00 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. 24ம் தேதி காலை 6:00 மணிக்கு முதற்கால பூஜையும், காலை 8:00 மணிக்கு நிவேதன ஆராதனையும், பகல் 12:00 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 6:00 மணிக்கு ஹோமமும் நடந்தது. (பிப். 25) காலை 5:00 மணிக்கு ஹோமமும், 6:15 மணிக்கு யாத்ராதானமும், காலை 7:00 மணிக்கு விமானங்களுக்கும், மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !