காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல கோவில்களில் (பிப். 26) தேரோட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில், (பிப். 26) தேரோட்டம் நடைபெ றுகிறது. பிரம்மோற்சவம் மற்றும் மாசி மகப்பெருவிழாவை ஒட்டி, (பிப். 26) தேரோட்டம் நடை பெறுகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்வவத்தின், ஏழாம் நாளான (பிப். 26) காலை ரத உற்சவம் நடை பெறுகிறது.
அதுபோல, காஞ்சி புரம் அடுத்த மாகறல் மாகறலீஸ்வரர் கோவில் மாசி மகப் பெருவிழாவின், ஏழாம் நாளான (பிப். 26) மாலை, 5:00 மணிக்கு தேரோட்டமும், படி தீபாராதனையும் நடைபெறு கிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான (பிப். 26) காலை, 6:00 மணிக்கு தேரோட்டமும், மாலை, 6:00 மணிக்கு தவன சாத்துபடி உற்சவமும் நடைபெறு கிறது. திருமால்பூர் அஞ்சனாக் ஷி அம்பாள் சமேத மணிகண்டீஸ்வரர் கோவில், மாசிமகப்பெரு விழாவின், ஏழாம் நாள் உற்சவமான (பிப். 26) காலை தேரோட்டமும், இரவு, தோட்ட உற்சவமும் நடைபெறுகிறது.