உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாக்கத்தில் பாப்பாத்தியம்மன், பொம்மி அம்மன், வெள்ளை அம்மன் சமேத மதுரைவீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா

பாக்கத்தில் பாப்பாத்தியம்மன், பொம்மி அம்மன், வெள்ளை அம்மன் சமேத மதுரைவீரன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன், பொம்மி அம்மன், வெள்ளை அம்மன் சமேத மதுரைவீரன் ஆகிய சுவாமிகளுக்கு நூதன கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவையொட்டி, (பிப்.24) மாலை 5 மணிக்குமேல் விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பூஜையும், இரவு 9.30 மணிக்கு மஹாபூர் ணாஹூதி தீபாராதனையும் நடந்தது.

இதனை தொடர்ந்து (பிப்.25) காலை 5 மணிக்கு இரண்டாம் கால கோபூஜை, யாக பூஜை, யாக வேள்ளி பூஜை அடுத்து காலை 6.30 மணிக்கு கடம் புறப்பட்டு மோணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டன. இதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !