உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானிசாகர் அணையில் மழை வேண்டி வேள்வி

பவானிசாகர் அணையில் மழை வேண்டி வேள்வி

பவானிசாகர் ; பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில், மழை வேண்டி, அணை நீர்த்தேக்க பகுதியில் பஞ்சபூத வேள்வி நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக, பவானிசாகர் அணை உள்ளது. இதன் மூலம், 247 லட் சம் ஏக்கர் நிலம், பாசன வசதி பெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அணையி லிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது அணை நீர்மட்டம், 50.45 அடியாக, நீர்வ ரத்து, 307 கன அடியாக, இருப்பு, 4.5 டி.எம்.சி.,யாக உள்ளது.

இந்நிலையில், பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு குழு சார்பில், அணை நீர்பிடிப்பு பகுதி யில், மழை வேண்டி, யாக குண்டம் அமைத்து, பஞ்சபூத வேள்வி நடந்தது. அதை தொடர்ந்து, 108 மந்திரங்கள் ஓதி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர் கூறியதாவது: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. பஞ்சபூத வேள்வி யாக பூஜை செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம். இதற்காக ஆண்டுதோறும், வழிபாடு நடத்தி வருகி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !