நாமக்கல் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
நாமக்கல் : நாமக்கல், பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நாமக்கல் வண்டிக் கார தெரு, பேட்டை சுண்ணாம்புக்கார தெருவில் கட்டப்பட்ட பகவதி அம்மன், விநாயகர், நவக்கிரகங்கள், தக்ஷணாமூர்த்தி, முருகன் மற்றும் துர்க்கையம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த, 22 கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா, அன்று மாலை, மோகனூர் காவிரிஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டது. 23ல் வாஸ்து சாந்தி, மகாலட்சுமி, கோ பூஜை; 24 காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது.
(பிப். 25) காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை துவங்கி, 9:00 மணிக்கு விமான கலச ங்கள், பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் மூலம், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர்,பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்தனர்.