உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் மாவட்டத்தில் அழகிரிநாதர் கோவில், செவ்வாய்ப்பேட்டைகோவில் "தேர்: ஆய்வு மேற்கொள்ள அறிவுரை

சேலம் மாவட்டத்தில் அழகிரிநாதர் கோவில், செவ்வாய்ப்பேட்டைகோவில் "தேர்: ஆய்வு மேற்கொள்ள அறிவுரை

சேலம் : சேலம் மாவட்டத்தில், பழமைவாய்ந்த தேர்களை ஆய்வு செய்ய, கோவில் ஊழியர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில், சின்னதி ருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், காருவள்ளி பிரசன்ன வெங்கட்ர மணசாமி கோவில், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில், ஆத்தூர் வடசென்னிமலை பாலசுப்ரமணி கோவில், இளம்பிள்ளை மாரியம்மன் கோவில், பேளூர் தான்தோன் றீஸ்வரர் கோவில், காளிப்பட்டி கந்தசாமி கோவில், பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் என, சேலம் மாவட்டத்தில் உள்ள, பழமையான கோவில்களில், தை, பங்குனி, சித்திரை மாதங்களில், தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

மதுரை தீ விபத்தை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும், தீ தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பழமையான கட்டடம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, பிரதான கோவில்களில் இருந் து, அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தற்போது, முக்கிய கோவில்களில் உள்ள பழமையான தேரின் நிலை குறித்த விபரம் தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !