கொட்டவாடியில் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் சுவாமி திருவீதி உலா
ADDED :2823 days ago
பெத்தநாயக்கன்பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடியில் (பிப்.25) நள்ளிரவு மயான பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு, சுவாமி திருவீதி உலா நடந்தது.
பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்து இரவு, 11:00 மணிக்கு மேல் பெரியாண் டிச்சி, காத்தவராயன், பாவாடராயன் உற்சவ மூர்த்திகள் மலர் அலங்காரத்தில், பம்பை மேளம் முழங்கிட, திருவீதி உலா நடந்தது.
கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள், சுவாமிக்கு தேங்காய், பழம் தட்டுடன் வரவேற்பு கொடுத்தனர். மாலை, 6:00 மணியளவில், மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.