சேலத்தில், அன்னை முருகன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2823 days ago
சேலம் : சேலத்தில், அன்னை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, (பிப். 25) தீர்த்தக்குடஊர்வலம் நடந்தது.
சேலம், பொன்னமாபேட்டையில் அன்னை முருகன் கோவில் உள்ளது. (பிப். 26) காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. (பிப். 25) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அதே பகுதியில் உள்ள, புத்துமாரியம்மன் கோவில் முன்பிருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு, முருகன் கோவிலை வந்தடைந்தனர்.