நாகலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2821 days ago
கோத்தகிரி : கோத்தகிரி சுள்ளிக்கூடு அறையட்டி ஹாடாவில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, 22ம் தேதி, ஐயன் அழைப்புடன் சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று, மைசூரு உளியநஞ்சன் புரம் சற்குரு மடாதிபதி சதானந்த சுவாமிகள், இட்டக்கல் பசவேஸ்வரர் மடாதிபதி சிவக்குமார சுவாமி ஆகியோர் தலைமையில், காலை, 7:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், சுள்ளிக்கூடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காணிக்கை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் நஞ்சய்யா மற்றும் ஊர் தலைவர் தருமன் ஆகியோர் முன்னிலையில், கிராம மக்கள் செய்திருந்தனர்.