மாரியம்மன் பாதயாத்திரை குழுவினர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ADDED :2882 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தாராபுரத்தனூர் பகுதி மக்கள், இரண்டு ஆண்டுகளாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு, தாராபுரத்தனூர் மாரியம்மன் கோவில் முன் பூக்குழி உருவாக்கி, அதில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.