உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவருக்கு நாய் வாகனம் ஏன்?

பைரவருக்கு நாய் வாகனம் ஏன்?

சோமாசிமாற நாயனார் செய்த யாகத்திற்கு, சிவன் நான்கு நாய்களை அழைத்து வந்தார். அந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாகும். சிவ அம்சமான பைரவருக்கு, நாய் வாகனமும், காவல் தெய்வங்களுக்கு “வேட்டை நாய்” வாகனமும் உள்ளன. எவ்வளவு தான் அடித்தாலும், நாய் தன்னை வளர்த்தவனை விட்டுப் பிரிவதில்லை. அதேநேரம், தனது எஜமானனுக்கு துன்பம் நேர்ந்தால் எதிரியை  மிரட்டவும் தயங்குவதில்லை. மனிதன் நன்றியுள்ளவனாகவும், பிறருக்கு துன்பம் வரும் நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவனாகவும் இருக்க வேண்டும் என கருதியே, பைரவருக்கும், காவல் தெய்வங்களுக்கும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. குழந்தை இல்லாதவர்கள், சிறிய நாய் வாகனம் வாங்கி வைப்பதாக பைரவரிடம் வேண்டிக் கொள்வதுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !