சுற்றினாலே போதும்!
ADDED :2825 days ago
மாசிமகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்பதில்லை. இக்குளத்தை சுற்றி வந்தாலே, நற்பலன் கிடைக்கும். ஒருமுறை சுற்றினால், பாற்கடலைக் கடையும் போது மத்தாக இருந்த மேருமலையை நூறு தடவை சுற்றிய பலனும், இருமுறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்றுமுறை சுற்றினால் பிறப்பற்ற நிலையும் ஏற்படும். மகாமக குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் தீர்ந்து விடும்.