அழகர்கோயில் உண்டியல் வருமானம் ரூ.17.72 லட்சம்
ADDED :5041 days ago
அழகர்கோவில் : அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மகா மண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள், ஆண்டாள் சன்னதி உட்பட 15 இடங்களில் உண்டியல்கள் உள்ளன. உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுகின்றன. நேற்று கோயில் துணை கமிஷனர் செல்வராஜ், உதவி கமிஷனர் ராஜமாணிக்கம், நகை சரிபார்க்கும் அதிகாரி நாகவேல் ஆகியோர் தலைமையில் எண்ணப்பட்டன. இதில் 17 லட்சத்து 72028 ரூபாய் பணம், 37 கிராம் தங்கம், 430 வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி இருந்தனர். கோயில் ஊழியர்கள், மதுரை யாதவர் பெண்கள் கல்லூரி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.