எதற்கு இந்த பெருமை?
ADDED :2824 days ago
குறைந்த வருமானமுள்ள சிலர், அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக, தங்களிடம் எல்லாம் இருப்பது போலவும், உயர்ந்தவர் போலவும் பேசுவார்கள். இப்படிப் பட்டவர்கள் நரகத்திற்கு செல்வர் என்கிறார் நாயகம். நரகத்துக்கு போகும் ஆறுபேர் பட்டியலில் இவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொடுமைக்கார அரசின் தலைவன், ஜகாத் (ஏழை வரி) கொடுக்காதவன், பெற்றோருக்கு துன்பம் செய்பவன்,கோள்சொல்பவன், குடிகாரன் இவர்களோடு பெருமையடிக்கும் பிச்சைக்காரனும் நரகத்திற்கு போவான்,” என்கிறார். “நான் ஏழை... ஆனால், இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறேன்,” என எவன் தைரியமாக, மற்றவர்கள் முன்னிலையில் சொல்கிறானோ, அவனே இறைவனுக்கு பிடித்தமானவன். பணம் இருப்பது போல் நாடகமாடுபவர்கள் இனியாவது திருந்தட்டும்.