வால்பாறை ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்
வால்பாறை : வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலின் 52வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை டவுன் வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலின் 52 வது ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு அபிஷேக பூஜையும், 6.00 மணிக்கு உஷபூஜையும் நடந்தது. காலை 7.00 மணிக்கு தாசில்தார் குணாளன், டாக்டர் முனுசாமி ஆகியோர் திருக்கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர். விழாவில் இன்று( 29ம் தேதி) காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.15 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு அபிஷேகமும், 6.00 மணிக்கு உஷபூஜையும், 6.30 மணிக்கு தீபாராதனையும், 9.00 மணிக்கு நவகிரக அபிஷேகமும் நடக்கிறது. நாளை (30ம் தேதி) மாலை 3.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மயில்கணேஷ், துணைத்தலைவர் மனோகரன், செயலாளர் ஜெகதீஸ் உட்பட பலர் செய்து வருகின்றனர்.