சிவகங்கை சிவன் கோயில் மண்டலாபிஷேக விழா
சிவகங்கை :சிவகங்கை சிவன் கோயில் ஐயப்பன் சன்னதியில் சுவாமிக்கு மண்டலாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை ஐயப்பனுக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட அனைத்துவித அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9 மணிக்கு கஜபூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு, யானைகள் மற்றும் நடன குதிரைகளுடன் தமிழக சிறந்த கலைஞர்களின் செண்டை மேளம், பூக்காவடி, தேவராட்டம், பத்ரகாளி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளுடன் சுவாமி புறப்பாடு நடந்தது. சிறப்பு பூஜைகளை குருசாமி ராதா செய்திருந்தார். ராதா குருசாமி ஐயப்ப பக்த சபை தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் பாலாஜிமணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர். திருப்புத்தூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் மகரஜோதி யாத்திரையை முன்னிட்டு மண்டலாபிஷேக விழா நடந்தது. நேற்று முன் தினம் காலை 9 மணிக்கு 5 கலசங்களுடன் மண்டலாபிஷேக பூஜை துவங்கின. ராமனாதன், ஏ.வி.நாகராஜன் முன்னிலையில் சேகர் துவக்கி வைத்தார்.தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சுவாமி திருவீதி உலாவை அருணகிரி துவக்கி வைத்தார்.
தேவகோட்டை:தேவகோட்டை தர்மசாஸ்தா கோயிலில் மண்டல பூஜை திருவிழா கடந்த 25 ந்தேதி ஏகதின லட்சார்ச்சனையுடன் துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, மஞ்சள்மாதா வீதி உலா, நிறைவுநாளில் மகாஅபிஷேகம், மகேஸ்வர பூஜை, ஐயப்பன் சுவாமி வீதி உலா, சிறப்பு மண்டல பூஜைக்குப்பின் கோயில் நடைசாத்தப்பட்டது.