சிவகிரியில் கோமாதா பூஜை
ADDED :2814 days ago
கொடுமுடி: கொடுமுடி அருகே, கொல்லன்கோவில் கிராமம், கந்தசாமிபாளையத்தில், பிரசித்தி பெற்ற சடையப்ப சுவாமி கோவில் உள்ளது. நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் அதிகரிக்க, இங்கு நேற்று காலை, கோமாதா பூஜை நடந்தது. இதில், 12 ராசிகளை குறிக்கும் வகையில், 12 கன்றுடன் கூடிய, நாட்டு மாடுகளுக்கு பூஜை நடந்தது. மாடு மற்றும் கன்றுகளுக்கு வாழைப்பழம், அகத்தி கீரை வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, சடையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.