காமாட்சி கோவிலில் 2ல் திருக்கல்யாணம்
ADDED :2814 days ago
கொடுமுடி: ஈரோடு மாவட்டம், சிவகிரி, காமாட்சி அம்மன் கோவில், பொங்கல் விழா, இன்று காலை தொடங்குகிறது. தமிழ் முறை யாக வேள்வி பூஜை, சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் நடக்கிறது. நாளை காலை, காவிரிக்கு தீர்த்தக்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம், இரவு மாவிளக்கு பூஜை, சுவாமி புறப்பாடு நடக்கிறது. மார்ச், 2ல் காமாட்சி உடனமர் ஏகாம்பர நாதர் திருக்கல்யாண உற்சவம், இரவில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. மார்ச், 3ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.