மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :3146 days ago
சங்ககிரி: சங்ககிரி, மலைக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. 15ம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, பூங்கரகம் எடுத்து வந்தனர். சிலர், காளிவேடமணிந்து, சங்ககிரியில், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்கல் வைத்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.