உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு விழா
ADDED :2813 days ago
உடுமலை;உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.உடுமலையில் பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று ஆறாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பூச நட்சத்திரத்தில், பிரசன்ன விநாயகர், சவுரிராஜ பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக, சிறப்பு யாகங்கள் கோவிலில் நடத்தப்பட்டன. பிரசன்ன விநாயகர் கோவில் அறப்பணி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.