மாரியம்மன் பொங்கல் விழாவில் பூவோடு எடுத்து வழிபாடு
ADDED :2812 days ago
பல்லடம்; பல்லடத்தில், மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு @நற்று, நூற்றுக்கணக்கான பக்தர்கள், பூவோடு எடுத்து வழிபட்டனர். பல்லடம் பனப்பாளையத்தில், விநாயகர், மாகாளியம்மன் மற்றும் மாரி யம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வரு கிறது. இதை முன்னிட்டு, கடந்த, 19ல், பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து கிராமசாந்து, அம்மன் அழைப்பு, கம்பம் போடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்விழாவில் நேற்று மாலை, 5.00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூவோடு எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.