உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா

ரங்கநாத பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், மாசிமாத வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது. விழயாவையொட்டி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், பன்னீர், கரும்புச்சாறு மற்றும் தேன் என, ஒன்பது வகையான அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, துளசி, ரோஜா, மல்லிகை, அரளி, சம்பங்கி, செம்பருத்தி, செவ்வந்தி, சேவல் பூ, முல்லை என, ஒன்பது வகையான மலர்கள் கொண்டு சிறப்பு அலங்கார பூஜை கள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !