சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
ADDED :2874 days ago
காஞ்சிபுரம்: ’மகா பெரியவர்’ என அழைக்கப்படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், ’பிருந்தாவனம்’ அருகிலேயே, ஜெயேந்திரரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை நல்லடக்கம் செய்தவற்கான இறுதி சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின், ’மகா பெரியவர்’ என அழைக்கப்படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், ’பிருந்தாவனம்’ அருகிலேயே, ஜெயேந்திரரும், நல்லடக்கம் செய்யப்பட்டார். இதில் பொன்.ராதாகிருஷ்ணன், சதானந்த கவுடா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.