உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்காக ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 5 அடி உயர விளக்கு

பக்தர்களுக்காக ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 5 அடி உயர விளக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்காக, புதியதாக விளக்கு நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதலுடன் வரும் பக்தர்கள், எண்ணெய் மற்றும் நெய் தீபங்களை பல இடங்களில் ஏற்றி வருகின்றனர். இதனால் கோயில் மண்டபங்கள், கற்தூண்கள் மாசுபடுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கவும், பக்தர்கள் ஆண்டாளுக்கு தாங்களே நேரடியாக விளக்கு ஏற்றும் வகையில் கொடிமரத்தின் முன், 5 அடி உயர விளக்கு நிறுவப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களை ஏற்றுகின்றனர். இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !