உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

அவிநாசி: அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நேற்று நடந்தது. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த, 20ல், பொட்டு சாமி பொங்கலுடன் துவங்கியது. 21ம் தேதி,  காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து,  தினமும் சுவாமிக்கு,  சிறப்பு  அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று,  அதிகாலை  அம்மன் அழைத்தல், மாவிளக்கு, பூவோடு ஊர்வலம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மஞ்சள் நீர் உற்சவம்,  சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன், பொங்கல் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !