உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லடம் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா

பல்லடம் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா

பல்லடம்: பல்லடம் பனப்பாளையம் விநாயகர், மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில், நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பல்லடத்தை அடுத்த பனப்பாளையத்தில், விநாயகர், மாகாளியம்மன், மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த, 25ம் தேதி முதல், அம்மன் அழைப்பு, கம்பம் போடுதல், மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றன. இவ்விழாவில் நேற்று காலை, 10.00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா; அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் திருவீதி உலா நடந்தது. பகல், 12.00 மணிக்கு மேல், மாகாளியம்மன், மாரியம்மன், விநாயகருக்கு அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !