உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 கோவில்களில் இன்று சிறப்பு பூஜை

108 கோவில்களில் இன்று சிறப்பு பூஜை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இந்து முன்னணி சார்பில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் இரு மாநில மக்களும் ஒற்றுமையாக செயல்பட வலியுறுத்தி 108 கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. பொள்ளாச்சியில், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாநில செயலாளர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி சார்பில் வரும் ஜன., 26ம் தேதி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் இந்துக்கள் உரிமை மீட்பு மாநாடு நடக்கவுள்ளது. மாநாடு சிறப்பாக நடக்க வலியுறுத்தியும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் இரு மாநில மக்களும் ஒற்றுமையாக செயல்பட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மக்களின் அச்சத்தை போக்கி, இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும் இந்துமுன்னணி சார்பில் இன்று 108 கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. மாரியம்மன் கோவிலில் காலை 8.00 மணிக்கு சிறப்பு பூஜை துவங்குகிறது. நகரப்பகுதி முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களில் இந்த சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜைக்கு ஆர்.எஸ். எஸ்., மாநில தலைவர் மாரிமுத்து தலைமை வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !