உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுக்கூடல் கோவிலில் மாசி மக விழா கோலாகலம்

திருமுக்கூடல் கோவிலில் மாசி மக விழா கோலாகலம்

திருமுக்கூடல்: திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று, மாசி மக திருவிழா கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம், பவுர்ணமி அன்று மாசிமக விழா விசேஷமாக நடப்பது வழக்கம். அதன் படி, இந்தாண்டிற்கான மாசி மகத்தையொட்டி நேற்று விழா நடந்தது. காலை, 11:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அப்பன் வெங்கடேச பெருமானுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு, கோவிலில் இருந்து சக்கரத்தாழ்வார் அப்பகுதி பாலாற்றுக்கு வரவேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆற்று நீரில் மூழ்கி புனித நீராடினர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !