காளியம்மன் கோவில் திருவிழா: வண்டிவேடிக்கை, அம்மன் வீதி உலா
ADDED :2882 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், கோவில் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. குமாரபாளையம், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று, தேரோட்டம், வாண வேடிக்கை, அம்மன் வீதி உலா, பட்டிமன்றம் ஆகியவை நடந்தன. பல்வேறு சுவாமி வேடங்களில் குழந்தைகள் அசத்தினர். மரம் வளர்ப்போம் என்ற பிரசாரத்தில் அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. சேலம் பிரதான சாலை, குளத்துக்காடு என்ற பகுதியில் துவங்கிய வண்டி வேடிக்கை, காளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, கோவில் வளாகம், காவிரி ஆறு ஆகிய இடங்களில் வாண வேடிக்கை நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பல்வேறு வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா நடந்தது. இரவு, வாசுகி நகர் மாரியம்மன் கோவிலில், நகைச்சுவை பட்டிமன்றம், தேவகோட்டை ராமநாதன் தலைமையில் நடந்தது.