பத்ரகாளியம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :2882 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபி?ஷகம் நேற்று தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக கணபதி, நவக்கிரஹ, மஹாலட்சுமி ?ஹாமம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து காவேரி தீர்த்தம், முளைப்பாரியுடன் பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. இன்று காலை மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது. நாளை காலை, 7:30 - 8:00 மணிக்குள், விமான ராஜகோபுரங்களுக்கு கும்பாபி?ஷகம் நடக்கிறது.