கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2882 days ago
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, பெருமாகவுண்டம்பட்டியிலுள்ள, அரசு வேம்பு விநாயகர், சஞ்சீவராய பெருமாள், சீதாராமர், சுதர்சனர், தும்பிக்கையாழ்வார், 42 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு, நாளை, கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று, ஏராளமான பக்தர்கள், கஞ்சமலை சித்தர் கோவிலில் இருந்து, புனித நீர் நிரப்பிய தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, சுவாமியை தரிசித்தனர்.