மணமான பெண்கள் மெட்டி அணிவது கட்டாயமா?
ADDED :2860 days ago
கற்புநெறி தவறாமல் வாழ வேண்டும் என உறுதிமொழி எடுக்க, அம்மி மிதித்தல் என்னும் சடங்கை திருமணத்தில் நடத்துவர். இதற்கு முன்பாக மணமகன், மணமகளின் காலில் மெட்டி அணிவிக்க வேண்டும். மங்களத்தின் அடையாளமான மெட்டி அணிந்தால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். சில குடும்பத்தில், மெட்டியை நாத்தனார் அணிவிப்பதும் உண்டு.