சிவன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :5049 days ago
துறையூர்: துறையூர் சிவன் கோவிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 51வது ஆண்டு சிறப்பு அபிஷேகம், அன்னதானம், மண்டல பூஜை, 1008 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
மண்டல பூஜைக்கு பெருமாள்மலை வளர்ச்சி பணிக்குழு கவுரவ தலைவர் டாக்டர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கிரிவல கமிட்டி தலைவர் விஜயராகவன், நகராட்சி தலைவர் முரளி, கிரிவல கமிட்டி துணைத்தலைவர் அரங்கராஜன், முன்னாள் அறங்காவலர் தலைவர் மகாராஜன், கமிட்டி செயலர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
சேவா சங்க மாவட்ட செயலர் ஸ்ரீதர், கரூர் மாவட்ட செயலர் திருமாவளவன், அன்னதான கமிட்டி தலைவர் ரமேஷ், லோகு பிள்ளை பூஜையில் பங்கேற்று சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை சேவா சங்க துறையூர் தலைவர் ராஜு, செயலர் மதனகோபால் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.