சுங்குவார்தோப்பு உற்சவம் கோலாகலம்
ADDED :3141 days ago
திம்மராஜம்பேட்டை: சுங்குவார்தோப்பு திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பாலாறு ஒட்டிய பகுதியில், சுங்குவார்தோப்பு உள்ளது.இங்கு, மாசி பவுர்ணமி தினத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் மற்றும் இளையனார்வேலுார் சுப்ரமணிய சுவாமி ஆகியோர், உற்வச மண்டபத்தில் எழுந்தருளுவர். நடப்பாண்டு, மாசி திருவிழாவை முன்னிட்டு, இவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர், ரிஷப வாகனத்தில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இளையனார்வேலுார் பாலசுப்ரமணியருக்கு, விசேஷ பூஜை செய்து, அவளூர் கிராமத்திற்கு சுவாமியை அனுப்பினர்.