உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மகுடஞ்சாவடி: சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இளம்பிள்ளை அருகே, பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராயப் பெருமாள் கோவில் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட சீதாராமர், சுதர்சனர் சன்னதிகள், 42 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை, அரசு வேம்பு விநாயகர் சன்னதி ஆகியவற்றுக்கு, நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு, நான்கு கால யாக பூஜை, பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. 7:30க்கு, யாகத்தில் வைத்த புனிதநீர் குடங்களை, பட்டாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து, கோபுர கலசங்கள், ஆஞ்சநேயர் சிலைக்கு ஊற்றி, கும்பாபி?ஷகத்தை நடத்திவைத்தனர். அப்போது, திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். விழா கமிட்டியினர், தீயணைப்பு வாகனம் மூலம், தீர்த்தம் தெளித்தனர். அகன்ற திரை மூலம், கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இன்றிரவு, 7:30 மணிக்கு, சிறப்பு இன்னிசை பட்டிமன்றம் நடக்கவுள்ளது.

* பனமரத்துப்பட்டி அருகே, நல்லியாம்புதூரில், செல்வமாரியம்மன், மகா கணபதி கோவில் கும்பாபி ?ஷகம், நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, வேத பாராயணம், நாடிசந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, வஸ்திர ஹோமம், பூர்ணாஹூதி, கலசம் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 8:20க்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபி?ஷகம் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். இதையொட்டி, மகா கணபதி, செல்வமாரியம்மனுக்கு, அபி ?ஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.

* மேச்சேரி, தெத்திகிரிப்பட்டி, அகத்தியர் நகர், அபய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ?ஷகம், நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்தது. அதில், இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !