அபூர்வ நடராஜர்!
ADDED :2886 days ago
திருவெண்காடு தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான் பதினான்கு புவனங்களைக் குறிக்கும் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நமக வரையில் உள்ள 81 பத மந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் கோத்த அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத்துண்டுகள் கோர்தத ஆரம், பதினாறு கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகள் என்று வித்தியாசமான கோலத்தில் தரிசனம் தருகிறார்.