புலித்தோலுடன் நந்தி!
ADDED :2815 days ago
திருக்கழுக்குன்றத்துக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஒரகடம் எனும் திருத்தலம். இங்கேயுள்ள மலையின் மீது கோயில் கொண்டு அருள்கிறார். வாடாமல்லீஸ்வரர், அம்பாளின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. ராமபிரான் மல்லிகை மலரால் பூஜித்த தலம். மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே கருவறைக்கு எதிரே இருக்கும் நந்தி வித்தியாசமானவர். ஒரு சமயம் இத்தலத்து இறைவன் தன் வாகனமான நந்திதேவருக்குப் பரிசாக தன்னுடைய புலித்தோலை வழங்கினாராம். அதனால் இங்குள்ள நந்திதேவர் புலித்தோலை அணிந்தபடி காட்சி தருகிறார். இதுபோன்ற நந்தி தரிசனம் காண்பது அபூர்வம் என்கிறார்கள்.