காளியம்மன் கோவிலில் சிறப்பு அன்னதானம்
ADDED :2871 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கம் சார்பில், காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது. குமாரபாளையத்தில், சுற்றுலா வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலம் நாடும் சங்கம் சார்பில், மாசி திருவிழாவில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. அலகு குத்தி, அங்கபிரதட்சணம் செய்தும் அம்மனை வழிபட்டனர். பஸ் ஸ்டாண்டில் சங்கத்தின் சார்பில், 1,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.