பண்ணாரி கோவிலில் தீபா தரிசனம்
ADDED :2793 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரியம்மன் கோயிலில், ஜெ.தீபா, நேற்று தரிசனம் செய்தார். சத்தியமங்கலம் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, நேற்று மாலை, 7:30 மணியளவில், ஜெ., அண்ணன் மகள் தீபா வந்து, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: யாரிடமும் போட்டி போட, நான் அரசியலுக்கு வரவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள், வீட்டு முன்பு கூடி, அரசியலுக்கு வரவேண்டும் என்றதால், வந்தேன். மிக விரைவில், நான் தொடங்கிய பேரவை கட்சியாக அறிவிக்கப்படும். வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. தேர்தல் நேரத்தில், யாருக்கு ஆதரவு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பேன். பழனிசாமி அரசு, விரைவில் கலைக்கப்பட்டு, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.