சிறியூர் மாரியம்மன் கோவில் விழா:பூ குண்டம் இறங்கிய பக்தர்கள்
ஊட்டி: மசினகுடி அருகேயுள்ள சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா, விமரிசையாக நடந்தது.நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே உள்ள சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த, 4ல், அம்மன் அழைப்பு நடந்தது. நேற்று, பூ குண்ட உற்சவம் நடந்தது. இதில், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை நுாற்றுக்கணக்கானவர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.வனங்கள் சூழ்ந்த பகுதியில், ’பேசும் தெய்வம்’ என பக்தர்களால் புகழப்படும் இக்கோவிலில் வீற்றிருக்கும் மாரியம்மனை வழிபட மசினகுடி, கூடலுார் உட்பட உள்ளூர்வாசிகள் மாவட்டத்தின் பிற இடங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், மக்களும் பங்கேற்றனர்.இக்கோவிலில்,வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளதால், பக்தர்கள் வேண்டுதல் செய்து, நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.