13ல் காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரருக்கு ஆராதனை
ADDED :2792 days ago
காஞ்சிபுரம்:ஜெயேந்திரர் ஸித்தியடைந்ததை ஒட்டி, மார்ச் 13ல், காஞ்சிபுரம் சங்கர மடத்தில், ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் சங்கரமடத்தின், 69வது மடாதிபதியான ஜெயேந்திரர், பிப்., 28ல், காஞ்சிபுரத்தில் ஸித்தியடைந்தார். மறுநாளான, மார்ச் 1ல், சங்கர மடம், பிருந்தாவனத்தில், மஹா பெரியவர் அதிஷ்டானம் அருகே, அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு, காஞ்சிபுரம் சங்கர மடத்தில், மார்ச் 13, காலை, 9:00 மணிக்கு ஆராதனையும், மாலை, 6:00 மணிக்கு ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறும் என, சங்கரமடம் அறிவித்துள்ளது.