உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கண்ணப்புரம் சவுரிராஜப்பெருமாள் தெப்ப உற்சவம் கோலாகலம்

திருக்கண்ணப்புரம் சவுரிராஜப்பெருமாள் தெப்ப உற்சவம் கோலாகலம்

நாகப்பட்டினம்: திருக்கண்ணப்புரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமக தெப்ப உற்சவம் நடந்தது. நாகை அடுத்த திருக்கண்ணப்புரத்தில் கண்ணபுர நாயகி சமேத சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்ளது.

திவ்ய தேசங்களில் 17வது திவ்ய தேசமான இக்கோவிலில்,  மாசிமக திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் ஆகிய நான்கு நாச்சியார்களுடன்  எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் நடந்த இசைக் கச்சேரியில், 4 ஆயிரம் திவ்ய பாசுரங்கள் பாடப்பட்டன. விடிய விடிய நடந்த தெப்ப உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !