உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில் மண்டல பூஜை நிறைவு

ஷீரடி சாய்பாபா கோவில் மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கவீஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு, கணபதி ?ஹாமம், நவக்கிரக ?ஹாமம், மஹா நிவர்த்தி ?ஹாமம், சுத்தி ?ஹாமம் மற்றும் கலச பூஜை நடந்தது. சாய்பாபாவின் சிலைக்கு, பால் அபி ?ஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கலெக்டர் கதிரவன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !