வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2776 days ago
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழித் துணை விநாயகர் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட மலைப்பாதையின் நுழைவு வாயிலில், வழித் துணை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், உபயதாரர்கள் மூலம் நேற்று நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 15 கலசங்கள் வைத்து, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று, காலை, 8:00 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கோவில் விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.