மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா ஜோர்
ADDED :2776 days ago
சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில்களில், பொங்கல் விழா நடந்தது. சென்னிமலையை அடுத்த, சொக்கநாதபாளையம் சுயம்பு மாரியம்மன் கோவில், பொங்கல் வைபவம், நேற்று நடந்தது. இதேபோல், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவிலிலும், பொங்கல் விழா நடந்தது. இரு கோவில்களிலும், சுற்று வட்டார பெண்கள், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆடு, கோழிகளையும் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில், கம்பம் பிடுங்கப்பட்டு முறையே ஆற்றில், கோவில் கிணற்றில் விடப்பட்டது.