உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நகை ஆய்வு செய்ய கோரிக்கை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நகை ஆய்வு செய்ய கோரிக்கை

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் தொன்மையான சிலைகள், தங்க ஆபரணங்களை ஆய்வு செய்து, பொதுமக்கள் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோழர், பல்லவர், விஜயநகர பேரரசு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் தொன்மையான சிலைகள், விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது.அவற்றில் சில சிலைகள் காணாமல் போனதாகவும், மேலும் உள்ள சிலைகள், ஆபரணங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும், மாவட்ட வருவாய் அலுவலரிடம், டில்லிபாபு என்ற பக்தர் நேற்று மனு அளித்தார்.

மனுவில் அவர் கூறிஇருப்பதாவது: ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள தொன்மையான சிலைகளையும்,தங்க நகைகள், ஆவணங்களையும் இந்து ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அளித்த மனுவிற்கு இது வரை எந்த பதிலும் இல்லை. இக்கோவிலில் உள்ள சிலைகள் சில காணாமல் போய் உள்ளன. அதே போல், நகைகளும் கடத்தப்படலாம். மேலும், கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.இக்கோவில் மூலப்பதிவேட்டை அடிப்படையாக கொண்டு, கோவில் நகைகளை, பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான ஆதாரங்கள் அழிந்து வருவதால், உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !