உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கனூர் மாரியம்மன் கோவில் திருவிழா

கொங்கனூர் மாரியம்மன் கோவில் திருவிழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கொங்கனூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. குமாரபாளையம் அருகே, தேவூர், கொங்கனூர் மாரியம்மன் கோவில் திருவிழா, பிப்., 23ல் துவங்கியது. நேற்றுமுன்தினம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் பவனி வர, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. கொட்டாயூர், நல்லதங்கியூர், வட்ராம்பாளையம் வழியாக, கோவில் வந்தடைந்தது. பெண்பக்தர்கள் ஏராளமானோர் அக்னி சட்டி ஏந்தியவாறு வந்தனர். ஆண் பக்தர்கள் தங்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு, அலகு குத்தியவாறு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !