உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, சின்னையம்பாளையம் கிராமத்தில், காளியம்மன் கோவில் புதிதாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, காளியம்மனுக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விக்னேஷ்வர பூஜை, திருமுறை பாராயணம் உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சாமிநாதகுருக்கள் தலைமையில், மூன்று கால பூஜைகள் முடிக்கப்பட்டு, நேற்று காலை, 8:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை, சின்னையம்பாளையம் முன்னாள் பஞ்., தலைவர் ராசுகவுண்டர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை காண, சின்னையம்பாளையம், கழுகூர், போத்தராவுத்தன்பட்டி, கூடலூர் பஞ்சாயத்து மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !